கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய வித்தியாரம்ப விழா இன்று (14) அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடை பெற்றது .

நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார்,ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்ராஹீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

முதல் நாள் பாடசாலைக்கு வருகை தந்த முதலாம் தர மாணவர்களை இரண்டாம் தர மாணவர்கள்  மாலை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர் , நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள்  கலந்து சிறப்பித்தனர் 

கருத்துரையிடுக

 
Top