பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து,
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எங்களையும் சிறையில் போடவும் என அங்கிருந்த பிக்குமார்கள் சத்தமிட்டுள்ளனர்.
சிறைச்சாலை வாகனம் நீதிமன்றை அண்மித்த பொது அதனை அங்குள்ள பிக்குமார்கள் செல்ல விடாமல் முன்னால் படுத்து மறைத்துள்ளனர்.
அதன்பிறகு பிக்குமார்கள் சுவரை குதித்து நீதிமன்றின் வளவினுள் சென்றுள்ளனர்.
சுமார் 300 பொலிசார் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்ட்டு நிலைமையை சரி செய்து வருகின்றனர்.
ஆர்பாட்டம் தொடர்கிறது..
இது தொடர்பில் வெளியான படங்கள்..
கருத்துரையிடுக

 
Top