நெல் வயல்களிலே உழவரோடு சேர்ந்து பாடுபட்டு உழைத்த காளை மாட்டுக்கும்இ பால் உணவு  கொடுக்கும் பசு மாட்டுக்கும் பூசை செய்து வழிபாடியற்றி பொங்கிப் படைத்து வணங்குவது தொன்று தொட்டு நிலவிவரும் இந்துக்களின் பாரம்பரிய வழக்கமாகும். 

வயலிலே நெல்மணி விளைச்சலுக்கு உதவிபுரிந்த சூரியபகவானுக்கும் மற்றும் நெல் வயலில் வேலை செய்த காளை  மாட்டுக்கும் மற்றும் பசுக்களுக்கும் ருசிமிக்க பொங்கல் பொங்கிப்படைத்து வணங்குவதே பட்டிப் பொங்கலின் சிறப்பாகும்.

அம்பாறை மாவட்டத்தின் பட்டிப் பொங்கல் விழா கல்முனையில்  இடம் பெற்றது. கல்முனை வன்னியார் வீதியில் உள்ள வர்மகுலரத்னம்  என்பவரது பண்ணையில் இடம் பெற்ற பட்டிப் பொங்கல் பூசை வழிபாடுகள் பெரிய நீலாவணை  முருகன் ஆலய பிரதம பூசகர் சிவஸ்ரீ  ரவி  குருக்கள் தலைமையில் இடம் பெற்றது. 
நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்திய அதிகாரி ஏ.எம்.ஜிப்ரி உட்பட பண்ணையாளரின் குடும்பத்தவர்களும் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

 
Top