இலங்கை வாழ் மக்களுக்கு  புதியதொரு பொருளாதார  மற்றும் சமுதாயப்  பாதையினைத்  திறந்து  இன்றைய  நாளை  விட  சிறந்த நாளைய தினத்தினை  நிர்மாணிப்பதற்கான  பணியாற்றும்  மனோ நிலையில்  மாற்றத்தினை  சகல  அரச உத்தியோகத்தரினுள்ளும்  ஏற்படுத்தும் அவசியத்தை தெளிவு படுத்தி  2016 இல் பணியாற்றும் முதலாம்நாளான  இன்று  சகல அரச ஊழியர்களின் பங்கு பற்றலோடு  விசேட திட்டம்  அமுல் படுத்தப் பட்டதற் க்கமைய இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நடை பெற்றது.

அதன் பிரகாரம்  வலயக் கல்வி அலுவலக வளாகத்தில்  9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப் பட்டு  படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக  உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌன பிரார்த்தனை இடம் பெற்றது,

அதனை தொடர்ந்து  அலுவலர்களின் சத்தியம் உறுதிமொழி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல் அவர்களால்  வாசிக்கப் பட உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர் .

தொடர்ந்து  ஊழியர்கள் ஒன்று கூடல் நடை பெற்ற போது  பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் உட்பட கணக்காளர் பொறியியலாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டனகருத்துரையிடுக

 
Top