கிழக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோக விண்ணப்பதாரிகளுக்கான இலவச தயார் படுத்தல் வகுப்புக்கள்
கிழக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான இலவச தயார்படுத்தல் வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட தொழில் சேவை மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளன.

கிழக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கிழக்குமாகாண பொதுச்சேவையினால் கோரப்பட்டுள்ளன.

ஆகவே விண்ணப்பிக்கின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தொழில் சேவை மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு பயன்பெற்றுக் கொள்ளமுடியும் என்று நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தொழில் சேவை மத்திய நிலையம் போட்டிப்பரீட்சைகளுக்குத் தயார் படுத்துதல், தொழில் வாய்ப்புக்களுக்கான ஆலோசனை வழங்கல், தொழில்களைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் அலுவலகம் மட்டக்களப்பு அரசடி பொது நூலகக் கட்டத்தில் இயங்கி வருகின்றது. மேலதிக தகவல்களை 065 2227193 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளலாம்.

கருத்துரையிடுக

 
Top