( அப்துல் அஸீஸ்,யு.எம்.இஸ்ஹாக் )கல்முனை நகர் அமானா வங்கிக் கிளை திறந்து வைக்கும் நிகழ்வும், அமானா வங்கியின்  'பயணத்தின் போது  பண  பரிமாற்றம்' மேற்கொள்ளும் அறிமுக நிகழ்வும் இன்று கல்முனை நகர் ஒற்றுமை சதுக்கத்தில் இடம்பெற்றது.

அமானா வங்கியின் 25வது கிளை கல்முனை நகரில் திறந்து வைக்கப்பட்டதுடன், இவ் வங்கி வலையமைப்பின் முதலாவது  'பயணத்தின் போதே பன பரிமாற்றம்' மேற்கொள்ளும் முறையும்  இங்கு  அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை அமானா வங்கி முகாமையாளர் எஸ்.எச்.எம்.சமீம் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் அதிதிகளாக கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாக்கத்தலி,  அமானா வங்கி வலையமைப்பின் பிரதம நிறைவேற்றதிகாரி எம்.முகமட் அஸ்மீர் உட்பட மாநகர சபை உறுப்பினர் எ.எம்.றியாஸ் ,  அமானா வங்கி அதிகாரிகள், வர்த்தக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top