2015 ஆம் ஆண்டு கல்முனை கல்வி வலயத்தில் தேசிய மட்டத்திலும் ,மாகாண  மட்டத்திலும் விளையாட்டுப் போட்டிகளில்  திறமை காட்டி சாதனை படைத்த மாணவ வீர வீராங்கணைகளையும் , விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  நாளை 18.01.2016 கல்முனையில் நடை பெறவுள்ளது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி  மண்டபத்தில் இடம் பெறவுள்ள  இந்நிகழ்வில்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் ,கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும் , விசேட அதிதியாக கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாமும்  கலந்து கொள்ளவுள்ளனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவில் சாதனை படைத்த 230 விளையாட்டு வீர வீராங்கணைகள் பாராட்டி கௌரவிக்கப் படவுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கதாகும் . 

கருத்துரையிடுக

 
Top