(எம்.ஐ.எம்.அஸ்ஹர்,யு.எம்.இஸ்ஹாக் )


எச்.என்.ரீ. பட்டதாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  நியாயமான 15 அம்ச கோரிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ள தவறும் பட்சத்தில் தொழில்சங்க போராட்டம் தொடர்வதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
கற்கை நெறியினை முடித்த பின்னர் அடி உதைவாங்கியும் தொழில் பெறுவதற்காக ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் மேற்கொள்ளும் நிலைக்கு எச்.என்.ரீ.பட்டதாரிகள் தள்ளப்படக்கூடாது.
இவ்வாறு தொழில் ரீதியிலான தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா ( எச்.என்.ரீ.) பட்டதாரிகளின் தொழில் சங்கம் இன்று ( 10 ) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.நாஸர் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றிய தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஹுசைன் முபாறக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 
எச்.என்.ரீ.பட்டதாரிகள் தாமதமின்றி மிக விரைவாக பட்டதாரிகள் நியமனத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். 2005 ஆம் ஆண்டு முதல் காலத்திற்கு காலம் எச்.என்.ரீ.பட்டதாரிகள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களை உள்வாங்குவதிலும் இ பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களின் பட்டபடிப்பை ஏற்றுக் கொள்வதிலும் அரசாங்கத்திற்கு இருக்கின்ற முரண்பாடு எச்.என்.ரீ.பட்டதாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
எச்.என்.ரீ.பட்டதாரிகள் 2012 ஆம் ஆண்டு முதல் நியமனங்களில் இருந்து இடைவிலக்கப்பட்டவர்கள் இ எச்.என்.ரீ.பாட நெறியினை புர்த்தி செய்தவர்கள் இ இந்த நிலமையை ஏற்றுக் கொள்ளாத சந்தர்ப்பத்தில் அதிகமான பட்டதாரிகள் தங்கள் பயிலுனர் காலத்திலிருந்து இடைவிலகி இன்று வரை பாதிக்கப்பட்டவர்களாகவும் தொழிலினை பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் வீடுகளுக்குள் முடங்கி காணப்படுகின்றனர்.
அதுமாத்திரமின்றி சம்மாந்துறையில் இன்று வரை எச்.என்.ரீ.பட்டதாரிகள் தொழிலின்றி பிரதேச செயலகத்தில் பயிலுனர்களாக இணைக்கப்பட்டு நிதந்தரமாக்கப்படாமல் உள்ளனர். இலங்கையின் பல பாகங்களிலும் பயிலுனர்களாக பயிற்சி நெறிக்கு சென்று  எச்.என்.ரீ.பட்டதாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட புறக்கணிப்பு காரணமாக 2011 ஆம் ஆண்டு அதிகளவிலான எச்.என்.ரீ.பட்டதாரிகள் நியமனத்திற்குள் உள்வாங்கியதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. ஆகவே தொடர்ந்தும் இப்பட்டதாரிகள் காலத்திற்கு காலம் ஏற்படுத்தப்பட்டு வரும் இந்த பிரச்சினையை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம். இந்த பிரச்சினை தொடராத வண்ணம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த முற்றுப் புள்ளி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். இலங்கையிலுள்ள பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பிற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் என கோரப்பட வேண்டும். அது மாத்திரம் அல்ல எச்.என்.ரீ.பட்டதாரிகளை தொழில்சார் நியமனத்தில் எதிர்காலத்தில் உள்வாங்க வேண்டும். அதாவது கணக்குப்பரிசோதகர்களாக  உதவி கணக்காளராக , வருமானவரி உத்தியோஸ்தராக , தகவல் சேகரிப்பு உத்தியோஸ்தராக இவர்களை உள்வாங்கி இவர்களிடமுள்ள திறமைகளை அரசாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நாட்டில் தற்போது என்ன நடக்கின்றது என்று சொன்னால் எச்.என்.ரீ.பட்டதாரிகள் கடுமையாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் கல்வி வகுப்பாளர்களினால் பிழையாக வகுக்கப்பட்ட கல்விக் கொள்கையின் சதி வலைக்குள் எச்.என்.ரீ.பட்டதாரிகள் சிக்குண்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த வருடம் ஏற்பட்ட பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படதமலேயே இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
இடைவிடதா முயற்சியின் காரணமாக கடந்த மாதம் தற்போதய அரசாங்கம் இவர்களை பட்டதாரி நியமனத்திற்குள் உள்வாங்குமாறு பணித்திருந்தது. இதற்குப் பின்னரும் பிரச்சினை தோன்றமாட்டாது என்று எச்.என்.ரீ.பட்டதாரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் எங்கள் பட்டதாரி பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் மன்றாடி ஆர்பாட்டம் செய்து உண்ணாவிரதமிருந்து அடி உதை வாங்கி பெறக்கூடிய ஒரு கல்வியையா நாங்கள் கற்கின்றோம் என்று எச்.என்.ரீ.பட்டதாரிகள் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுமாத்திமன்றி ஒரு நியமனத்திற்கு எச்.என்.ரீ.பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டிருந்தால் அவர்களின் நியமனத்தின் பின்னராக பதவியுயர்வு எவருக்கும் தெரியாமல் முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான பதவியுயர்வின் போது 2005 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாது மேற்கொண்ட தொழில்சங்க முயற்சியின் காரணமாக அண்மையில் ஒரு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த ஆசிரியர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுமாத்திரமின்றி 2013 ஆம் ஆண்டு  தொழிலின்றி இடைவிலகிய கீழ் உழைப்பு பட்டதாரிகளாக கடமையாற்றும் எச்.என்.ரீ.பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அரசாங்கம் ஒரு பொடுபோக்கை கையாண்டுள்ளது. ஏன் இந்த பாராபட்சம் காட்டப்படுகின்றது. எச்.என்.ரீ.பட்டதாரிகள் பட்டத்தினை புர்த்தி செய்ததன் பின்னர் தொடர்ந்தும் இரத்தம் சிந்தித்தான் தொழில்வாய்ப்பையுமத் பதவியுயர்வினையும் எமது உரிமைகளையும் பெற வேண்டுமா.
எச்.என்.ரீ.கற்கை நெறியினை அரசாங்கம் வர்த்தமாணியில் உத்தியோகபுர்வமாக கோரிவிட்டு கற்கை நெறியினை நடாத்துவதற்கு நிநுவனங்களை நிறுவி  இணைப்பாளர்களை நியமித்து இ பாடநெறிகளை நடாத்துவதற்காக விரிவுரையாளர்களை அமர்த்திவிட்டு எச்.என்.ரீ.பட்டதாரிகளை அவமானப்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத உன்றாகும்.
வர்த்தமாணியில் 4690 இல் எச்.என்.ரீ.பட்டதாரிகள் வர்த்தக பட்டப்படிப்பிற்கு சமனானவர்கள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நியமனம் பெறுவதில் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. இதுவொரு சின்ன விடயமல்ல நாட்டில் இருக்கின்ற 9000 இற்கும் மேற்பட்டவர்கள் எமது தொழில் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் காலத்திற்கு காலம் இவர்கள் அனைவரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று எச்.என்.ரீ.பட்டதாரிகள் கற்கை நெறியினை தொடர்வதற்கு விண்ணப்பிக்கும் மாணவர் அச்சத்துடன் காணப்படுகின்றனர் அடிவாங்குவதற்கா இந்த கற்கை நெறியினை கற்க வேண்டும். வீதியில் ஆர்பாட்டம் செய்தா தொழிலினை பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். எனவே எதிர்காலத்தில் இந்த நிலமை மாறி எச்.என்.ரீ.பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின் போது உள்வாங்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் பிரச்சினைகள் அற்ற சமூகமாக மாற அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
கருத்துரையிடுக

 
Top