( யு.எம்.இஸ்ஹாக் )
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் ஒரே நேரத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று வாகனங்களுக்கு தீ வைக்கப் பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று  (10) அதிகாலை 2.00 மணிக்கு இடம் பெற்றதாகவும் இதன் போது வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் ஒன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும்  வாகன உரிமையாளர் ஜாபீர் என்பவர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக் குடி சாஹிபு வீதியில் வசிக்கும் வர்த்தகரான ஏ.எம்.ஜபீர் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களே  இனந்தெரியாதோரால் இவ்வாறு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. தீயினால் வீட்டின் முன் பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டதால் வீட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய சேதம் தவிர்க்கப் பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப் பட்டுள்ளது.கருத்துரையிடுக

 
Top