தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்

(பி.எம்.எம்.ஏ.காதர்)
தமிழ் மக்களும்.முஸ்லிம் மக்களும் ஐக்கியாமாக செயற்பட வேண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தவர் செனட்டர் மசூர் மௌலானா  அவருடைய இறப்பு எங்களுக்கு பெரும் வேதனையை தந்திருக்கின்றது நாங்கள் வருந்துகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,எதிர் கட்சி தலைவருமான   இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
காலம் சென்ற செனட்டர் எஸ்.இஸட்.எம்.மசூர்மௌலானாவின் பிறந்த ஊரான மருதமுனைக்கு ஞாயிறுற்றுக்கிழமை (06-12-2015)மாலை 5 மணியளவில் வருகை தந்து அவரின் உறவினர்களுடன் உரையாடிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:-மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் பல மிகவும் பெறுமதி மிக்க மனிதரை நாங்கள் இழந்திருக்கின்றோம்.தமிழ் பேசும் மக்களுடைய உண்மையான நண்பன் அவருடைய இறப்பால் துயருற்றிருக்கின்ற குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
இலங்கையில் தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் கட்சியினுடைய ஒரு உறுப்பினராக இருந்து கடமை புரிந்து தந்தை  செல்வநாயம் அவர்களுக்கு உதவியாக எப்பொழுதும் செயற்பட்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சினுடைய கொள்கையை தமிழ் பேசும் தமிழ்,முஸ்லிம் மக்கள் மத்தியில்  தெளிவாக விளக்கி ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி மக்கள் மத்தியில் கட்சிக் கொள்கைகளைப் பரப்பியவர் மசூர் மௌலானா.
அவர் கூட்டங்களில் பேசுகின்ற பேச்சுக்களை கேட்பதற்கு விஷேடமாக மக்கள் வந்து காத்திருப்பார்கள் அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாகப் போசுவார்.அந்தவகையில் தமிழ் அரசுக் கட்சியுடன் இறுக்கமான உறவை வைத்திருந்தவர் தமிழ் அரசுக் கட்சியால் செனட்டராக நியமிக்கப்பட்டவர்.அவருடைய தொர்பு எங்களுடன் நெடுக இருந்தது தமிழ் மக்களும்.முஸ்லிம் மக்களும் ஐக்கியாமாக செயற்பட வேண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தவர் அவருடைய இறப்பு எங்களுக்க வேதனையைத் தந்திருக்கின்றது.  
சமீபத்தில் கூட தமிழ் முஸ்லிம் மக்கள் உரிமையுடன் ஒற்றமையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.தன்னுடைய காலத்தில் அவர் எதிர்பார்த்த ஒற்றமையைக் காணாமல் மறைந்தது பெரும் வேதனையாகும்.இருந்த போதிலும் அவருடைய அந்த சிந்தனைகளை நிறைவேற்றுவதற்கு தமிழ்.முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு அரசியல் தீரவைக் காண்பதற்கு எங்களுடைய முயற்சி தொடரும் என்றார்.
தலைவர் சம்பந்தனுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா,எம்.அரியநேந்திரன் உள்ளிட்ட கட்சிப்பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top