இந்தியாவில் இருந்து  சட்ட விரோதமாக கொழும்பில் இருந்து கல்முனைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான ஆடைகள் கல்முனை பொலிசாரால் கைப்பற்றப் பட்டுள்ளன.
கைப்பற்றப் பட்ட ஆடைகள் 50 இலட்சத்துக்கும் அதிகம் என கல்முனை பொலிசார் தெரிவித்தனர். சாரி ,சல்வாரி  அடங்கிய 53 பொதிகள் கொழும்பில் இருந்து கல்முனைக்கு கொண்டுவரப்பட்ட போதே  இன்று அதிகாலை கைப்பற்றப் பட்டதுடன்  அதனை எடுத்து வந்த  நான்கு இந்தியர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது  கல்முனை பொலிஸ் நிலையத்தில்   கைது செய்யப் பட்டவர்கள்  விசாரிக்கப் படுவதுடன்  நீதி மன்றில் ஆஜர் படுத்துவதற்கான  நடவடிக்கை  எடுக்கப் படுவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார் தெரிவித்தார் .


கருத்துரையிடுக

 
Top