(பி.எம்.எம்.காதர்)
மருதமுனை டெக்லாங் கிழக்கு முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலைவிழாவும், பரிசளிப்பும் சமீபத்தில்  மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பாடசாலையின் தலைவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய தாய்.சேய்,நல சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக அதிபர்களான ஏ.ஆர்.நிஃமத்துல்லா,எம்.ஏ.எம்.இனாமுல்லா,வர்த்தகர் ஏ.எம்.முஸாதிகீன்,பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எம்.பாறூக்,நியாஸ் எம்.அப்பாஸ்,திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.நவாஸ் ஆகியோருடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன அதிதிகள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
பாடசாலை ஆசிரியை நூபியா நிஜாமுதீன் நிகழ்வை நெறிப்படுத்தினார் எஸ்.எச்.எம்.ஜௌசி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.    


கருத்துரையிடுக

 
Top