(பி.எம்.எம்.காதர்)
கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதமுனை,நற்பிட்டிமுனை கிராமங்களில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிய நிகழ்வு  நேற்று (15-12-2015)மருதமுனை திவிநெகும வங்கியில் நடைபெற்றது.
மருதமுனை திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.

திவிநெகும திணைக்களத்தின் மானியத்துடனும்,பயனாளிகளின் பங்களிப்புடனும் மருதமுனை நற்பிட்டிமுனை  கிராம திவிநெகும பயனாளிகள் 19து பேருக்கு இந்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 
இந்த நிகழ்வில் திவிநெகும உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top