(பி.எம்.எம்.ஏ.காதர் )

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  20 ஆவது  ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு  25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு   நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் கலை வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர்  வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன் போது  சிரேஸ்ட> கனிஷ்ட  ஊடகவியலாளர்கள் 24 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர் இவர்களின் விபரம்:-
(01)ஏ.எல்.ஜீனைதீன் (02)பி.எம்.எம்.எ.காதர் (03)ஐ.எல்.எம்.றிஸான் (04)யூ.எம்.இஸ்ஹாக்; (05)நழீம் எம் பதுறுத்தீன் (06)எம்.ஐ.எம்.வலீத் (07)ஏ.எல்.எம்.முஜாஹித் (08)ஏ.புஹாது  (09)எம்.பி.அஹமட்ஹாறூன் (10)ரி.கே.றஹ்மத்துள்ளா (11)எம்.ஐ.அன்வர் (12)ஏ.ஜே.எம்.ஹனீபா    (13)ஜெஸ்மிஎம்மூஸா (14)ஏ.எல்.றமீஸ் (15)எம்.சி.அன்சார் (16)எம்.ஐ.எம்.றியாஸ் (17)எம்.ஏ.றமீஸ் (18)எம்.எல்.சரிபுத்தீன் (19)ஆர்.தில்லைநாயாகம்  (20)எஸ்.நடனசபேசன் (21)எஸ்.எம்.அறூஸ் (22)ஏ.ஜஹ்பர் கரீம்  (23)எஸ்.எல்.ஏ.அஸீஸ்; (24)ஜலீல் ஜீ ஆகியோரே கௌரவிக்கப்படவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top