களுவாஞ்சிகுடி இ.போ.ச  பஸ் வண்டி சாரதி இனந்தெரியாதோரால் பாண்டிருப்பில் வைத்து தாக்குதல்  இடம் பெற்ற சம்பவம் ஒன்று  இன்று  மாலை இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதுடன் சாரதி கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது களுவாஞ்சி குடி  டிப்போவுக்கு சொந்தமான  N B -6950 இலக்க  பஸ் வண்டி  மட்டக்களப்பில் இருந்து  கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த வேளை  V C S -9770 இலக்க மோட்டார் சைக்களில்  வந்த இனந்தெரியாத மூவர் பாண்டிருப்பு அரசயடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக 6.50 மணிக்கு பஸ்ஸை வழிமறித்து  மூவரும் பஸ்சுக்குள் புகுந்து தலைக்கவசாத்தால்  சாரதியை சரமாரியாக தாக்கியுள்ளதாக  சாரதி முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தில்  காயம் அடைந்த சாரதி தம்பலகாமம் முள்ளிப் பொத்தானயை சேர்ந்த  முகம்மது சரீப்  தாரிக் சைபுல்லாஹ்  என்பவராவார் . சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

கருத்துரையிடுக

 
Top