(பீ.எம்.எம்.ஏ .காதர் ,யு.எம்.இஸ்ஹாக் )

தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுவதில் மர்ஹூம் மசூர் மௌலானா மிகுந்த அக்கறை காட்டியவர் ஆவர் எப்போதுமே இன ஒற்றுமைக்காக குரல் கொடுத்தார் அந்த ஒன்றுபட்ட சகஜ நிலையை பார்க்க முடியாமல் அவர் மறைந்து விட்டார். அவரது நீன்டகால எண்ணம் எம்மால் நிறைவேற்றப் படும் என்று இன்று மாலை மருதமுனைக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மசூர் மௌலானாவின் வீட்டுக்கு சென்று இன்று மாலை  அவரது உறவினர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 
அவருடன் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களான  கிழக்கு மாகான சபை விவசாய அமைச்சர் கே.துரை ராஜ சிங்கம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  பொன் செல்வராசா ,அரியநேந்திரன் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார்  ஆகியோரும்  கலந்து கொண்டனர். 
மசூர் மௌலானா அமரத்துவம் அடைந்த செய்தி தனக்கு தெரியாதென்றும் யாரும் சொல்லவில்லை என்றும் நேற்று மாலை செய்திகளை பார்த்தே அறிந்தேன் என்றும்  எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அங்கு கவலையுடன் கூறினார் 

கருத்துரையிடுக

 
Top