கிழக்கு மாகாண சபை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியாமான தீர்மானங்கள் தொடர்பாக மாகாண முதலமைச்சரால் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
இதன்போது, முதலமைச்சர் தெரிவித்த தீர்மானங்கள் பின்வருமாறு,
1. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 வழங்கப்படுதல்
2. நாவலடியிலிருந்து கடற்படை முகாம் வாயில் வரையிலான வீதியினை காப்பெட் வீதியாக புனர்நிர்மாணம் செய்தல்
3. மூதூர் மற்றும் திருக்கோவில், அட்டாளைச்சேனை வைத்தியசாலைகளை ஏ தரத்துக்கு உயர்த்துதல்.
4. கிண்ணியா வைத்தியசாலைக்கு தாதிகளுக்கான விடுதி அமைத்துக் கொடுத்தல்.
5. குச்சவெளி வைத்தியசாலையினை தள வைத்திய சாலையாக தரமுயர்த்தல். 
6. 2015 இன் வரவுசெலவு திட்டத் தொகையை விட 2016 வரவு செலவு திட்டத்தில் 969 மில்லியன் ரூபாய் விசேட திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2016 இற்கான கிழக்கு மாகாண நிதி 4232 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
7. விகிதாசார அடிப்படையை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணிகளுக்கு அமர்த்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு கல்வியமைச்சின் செயலாளரை அமைச்சரவை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்தினை கல்வி கல்லுரி தரத்தில் தரம் உயர்த்துதல் போன்றவைகளுக்கான அமைச்சரவை அங்கீகாரங்களும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top