(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை அல்குர்ஆன் மத்ரஸாக்கள் ஒன்றியத்தின் முப்பெரும் விழா சம்மாந்துறை ஜம்இய்யத்துல் குர்ஆனில் ஹகீம் வலய குர்ஆன் கல்விப் பணிப்பாளர் மௌலவி அல்-ஹாபிழ் ஏ.எல்.அப்துல் றஸீட் தலைமையில்  இன்று (6) அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெறறது.

இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் காதர், அம்பாரை மாவட்ட முஸ்லிம் கலச்சார உத்தியோகத்தர் ஏ.சுபைத்தீன், சம்மாந்துறை பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ஆசாத், ஜம்இய்யத்துல் குர்ஆனில் ஹகீம் நிர்வாகம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உயர் அதிகாரிகள், உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 20 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு,  குர்ஆன் பொதுப் பரீச்சையில் சித்திடைந்த  மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்துடன், முஹர்ரம் போட்டியில் வெற்றியீட்டிய  மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

   

கருத்துரையிடுக

 
Top