(எம்.எம்.ஜபீர்)
சாய்ந்தமருது லிற்றில் பிளவர்ஸ் முள்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு சித்தாலேப  கெகுளு நிறுவனத்தினால் நடாத்திய சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்  வழங்கும்  நிகழ்வு முன்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வு லிற்றில் பிளவர்ஸ் முள்பள்ளி பாடசாலை ஆசிரியை எம்.சீ.எஸ்.மிஸ்ரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நூறுல் மய்முனா, கௌரவ அதிதியாக சித்தாலேப  கெகுளு நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.விவேகனந்தா, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது பாடசாலையின் வருடாந்த கலை கலாச்சார நிகழ்வும் , பரிசளிப்பு விழாவும்  இடம்பெற்றது.

கருத்துரையிடுக

 
Top