டிசம்பர் 02 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மாதிரி பரீட்சைகள், உதவி வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளதனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்ட தடை அமுல்படுத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
 
மாணவர்களின் நலன் கருதி, தேசிய ரீதியில் நடாத்தப்படும் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், இத்தடைக்கான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துரையிடுக

 
Top