நற்பிட்டிமுனை அக்பர் ஆற்றுதொளிலாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின்  நிதி ஒதுக்கீட்டில் மீன் பிடி உபகரணம் வழங்கும் நிகழ்வு  இன்று சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய மண்டபத்தில் நடை பெற்றது.

சங்கத்தின் தலைவர் எம்.ரீ.நஸீம்  தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாகவும், அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்பு செயலாளர் ரஹ்மத்  மன்சூர்  கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு மீன் பிடி உபகரணங்களை வழங்கி வைத்தனர் .
சிறப்பு அதிதிகளாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.இப்ராஹிம் மற்றும் ஏ.கே நூர்தீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top