கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துகுட்பட்ட 65 பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கான  வவுச்சர்கள்  கல்லூரி அதிபர்களிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று 02.12.2015  வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்  பீ.எம்.வை .அரபாத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சீருடைக்கான வவுச்சர்களை வழங்கி வைத்தார் . பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் உட்பட அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

 தரம் ஒன்றிலிருந்து கல்விகற்கும்  சகல மாணவர்களுக்கும்  450 ரூபாவிலிருந்து 1700 ரூபா வரையிலான  வவுச்சர்கள் இதன் போது  வழங்கி வைக்கப் பட்டன . 

நேற்று மாலை கிடைக்கப் பெற்ற இந்த வவுச்சர்கள்  கல்வி அமைச்சின் உத்தரவுக்கமைய  03ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு கையளிக்கப் பட வேண்டும் என்பதற்காக  எமது உத்தியோகத்தர்களின்  பெரும் பங்களிப்புடன் அவசர அவசரமாக தரம் பிரிக்கப் பட்டு  வழங்கி வைக்கப் படுகிறது . இன்று பெற முடியாத அதிபர்கள் நாளை 03 காலை இதனைப் பெற்று உடன் மாணவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் அதிபர்கள் மத்தியில் தெரிவித்தார் .


கருத்துரையிடுக

 
Top