கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ.கமலதாஸன்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்துடன் இணைந்ததாக நடாத்தப்பட்டுவரும் சரஸ்வதி பாலர் பாடசாலையில் கடந்த  சனிக்கிழமை மாலை இடம் பெற்ற ஆண்டிறுதி கலை விழா நிகழ்விற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அலுவலக அதிகாரிகள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பெரியநீலாவணையிலுள்ள முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர் என ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானவை என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் இவ்விழாவின் விசேட அதிதிகளில் ஒருவருமான ஆசிரியர் வீ.கமலதாசன்  செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் .
பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலய அதிபர் வீ.யோகராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி பிரதம அதிதியாகவும்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலயரசன்,கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ.கமலதாஸன் ஆகிய நானும் , அம்பாறை மாவட்ட முன்பள்ளி பாடசாலை கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபைர், ஓய்வு  பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.ஜெகநாதன், பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திருமதி சி.நற்குணசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலும்  ,பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனமும் என்னால் அழைக்கப் பட்ட போது  வேலைப் பழு  காரணமாக இதில் கலந்து கொள்வதற்கு  முடியாதுள்ளதாக இருவரும் தெரிவித்த நிலையில் அழைப்பிதழில் அவர்களின் பெயர் சேர்க்கப் படவில்லை எனவும்  . மேலும் நீலாவணையில் உள்ள அனைத்து கோவில் நிருவாகிகளுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ.கமலதாஸன் தெரிவித்தார் . உண்மை நிலை இவ்வாறிருக்க நிகழ்விற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அலுவலக அதிகாரிகள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது என தெரிவிப்பது அபாண்டமாகும் என அவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top