(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச வறிய மாணவர்களின் கல்வித்தாகத்தை போக்கி அவர்களின் வாழ்க்கையில் எழுச்சியை உண்டு பண்ணும் நோக்கில் பாடசாலைகளின் வறிய மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.தயானந்தன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் பிரதித் தலைவரும் கல்முனை பெரியபள்ளிவசல் பேஷ் இமாமும்மான எம்.சி.ஏ.சமட் மௌலவி பிரதம அதிதியாகவும்,அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம்.இப்றாஹிம் கௌரவ அதிதியகவும் கலந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பானது இன,மத போங்கள் பாராது கல்விக்கு   அதிக முக்கியத்துவத்தை கொடுத்து  செயற்பட்டு வரும் அமைப்பானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரையிடுக

 
Top