( யு.எம்.இஸ்ஹாக் )

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் 3000 முன் பள்ளி ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண அமைச்சரவைத் தீர்மானத்துக்கமை 2016 ஜனவரி தொடக்கம் மாத கொடுப்பனவாக மூவாயிரம் ரூபா  வழங்கப் படும் என கிழக்கு மாகாண கல்வி, தொழில்நுட்பக்கல்வி, முன்பள்ளிக்கல்வி, விளையாட்டுப் பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு  மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடை பெற்ற சரஸ்வதி முன்பள்ளி மாணவர்களுக்கு ஒரு தொகுதி வகுப்பறை கற்றல் உபகரணங்கள், பேண்ட் வாத்திய இசைக்கருவிகள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தண்டாயுதபாணி இந்த விடயத்தை தெரிவித்தார்.
பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலய அதிபர் வீ.யோகராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி பிரதம அதிதியாகவும்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலயரசன்,கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ.கமலதாஸன், அம்பாறை மாவட்ட முன்பள்ளி பாடசாலை கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபைர், ஓய்வு  பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.ஜெகநாதன், பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திருமதி சி.நற்குணசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி மாணவர்களின் ஆண்டிறுதி கலை விழாவும் அவர்ளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் அங்கு இடம் பெற்றன. 


கருத்துரையிடுக

 
Top