விளையாட்டு துறை பிரதி அமைச்சர்  


கல்முனை தொகுதிக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று 2015.12.04(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு  கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கல்முனை,சாய்ந்தமருது, கலமுனை தமிழ் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக அனைத்து திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள் ,அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவரும்,விளையாட்டு துறை பிரதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான  HMM.ஹரிஸ்  கலந்து கொண்டு கல்முனை தொகுதி அபிவிருத்தி சம்மந்தமான விடயங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் சம்மந்தமாக விபரமாக பேசி தீர்க்கமான கலந்துரையாடல்களும் முடிவுகளும் எடுக்கப்பட்டது.


அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹரீஸ்  தெரிவித்ததாவது. நல்லாட்ச் அரசாங்கத்தில் முன்மொழியப் பட்டுள்ள  2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்  ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிதிகளை  திட்டமிட்ட அடிப்படையில்  முன்னுரிமைப் படுத்தவேண்டிய  விடயங்களை இன மத வேறுபாடுகளின்றி திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு  ஏதுவாக  இந்தக் கூட்டம் அமையும் எனவும் . பிரதமரினால் உறுதியளிக்கப் பட்ட கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை எந்தவொரு இனமும் பாதிக்காத வகையில் திட்டமிட்டு செய்வதற்கும் நான் எதிர் பார்கின்றேன் .
கல்முனை என்பது கொழும்பு,கண்டி,காலி , பொலநறுவை போன்று புராதன நகரம் அல்ல  அதனால்  கல்முனை  ஒரு பேசப்படாத நகராக காணப் படுகின்றது. கல்முனையை சர்வதேச ரீதியில் பேசக் கூடிய நகராக மாற்ற முதல் கட்டமாக  சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு நான் ஆசைப் படுகின்றேன்  இது சாதாரண விடயம் அல்ல  இதற்கான இடப்பரப்பு எமது பிரதேசத்தில் இல்லை என்பதால் இதற்கான திட்டத்தை முன்னெடுக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது என்றார் 

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன்,கலையரசன்  உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் இங்கு கருத்து தெரிவித்தனர். கருத்துரையிடுக

 
Top