பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் வழங்கும் திட்டத்தை இல்லாதொழிக்கச் செய்யும் திட்டமெதுவும் இருக்கின்றதா என்று தான் சந்தேகப்படுவதாகவும் இது தொடர்பான அறிக்கையொன்றை நாளை (09) வௌியிடவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (08) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பதிரண கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து தெரிவிக்கையில், நேற்றுவரை 95 வீதமான வவுச்சர்கள் வெற்றிகரமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் 7,700 உள்ளமையினால் வவுச்சர்களை கையொப்பமிடுவதில் பிரச்சினைகள் இருக்க முடியாது. பிரதான பாடசாலைகளில் 95 வீதமானவைக்கு வவுச்சர்கள் பெற்றுகெடுக்கப்பட்டுள்ளன.

வவுச்சர் பெற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top