அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 04 இந்திய பிரஜைகளையும் நேற்று  (17) வியாழக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் விடுதலை செய்துள்ளார். 
சென்னையிலிருந்து கல்முனைக்கு ஒரு தொகை புடவைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக  எடுத்து வந்த  வேளையில் நேற்று முன் தினம் புதன்கிழமை காலை 06.00 மணியளவில் கல்முனை பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர். 
குறித்த நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் முன்னிலையில் நேற்று  (17) ஆஜர்செய்தபோது குறித்த நபர்கள் சகல ஆதாரங்களையும் காண்பித்ததையடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட புடவை பொதிகளும்  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top