(  அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும்,பொதுக்கூட்டமும் நேற்று(12) மாலை மருதமுனை சமூக வள நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் சென்றகால நடவடிக்கைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், நடப்பு ஆண்டுக்கான நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் தலைவர்  ஏ.பி.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட  திவிநெகும பணிப்பாளர்  சந்துரூபன் பியதாச, அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உதார நானயக்கார, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ .ஆர்.எம். சாலிஹ்,  முகாமையாளர்களான  எ.சி.அன்வர், எஸ்.சதீஸ் ,ஒன்றியத்தின் செயலாளர்  ஐ.எல்.அருசுடீன் உட்பட கல்முனை பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top