ராம் கராத்தோ  டோ  அமைப்பின்  கராத்தே தரப் படுதலும்  பயிற்சிப் பட்டறையும்  இன்று ஞாயிற்றுக் கிழமை (06)  கல்முனை மரியா திறேசியா சர்வதேச அ .க  பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. 

இலங்கையில் இருந்து  சர்வதேச ரீதியில் பங்கு பற்றி  பல போட்டிகளில் வெற்றியீட்டிய  பல  கராத்தே வீரர்களை உருவாக்கியவருமான  ராம் கராத்தோ  டோ  அமைப்பின்  பிரதம போதனாசிரியர்  கே.கேந்திரமூர்தியின்  வழி  காட்டலில்  நடை பெற்ற இந்நிகழ்வில்  கல்முனை மரியா திறேசியா சர்வதேச அ .க  பாடசாலை  பணிப்பாளர்  அருட் சகோதரி  மேரி லூகிரீஸ்  பிரதம அதிதியாகவும் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் , சிரேஸ்ட கறுப்புப் பட்டி வீரர்  யோகாசன கலாநிதி  கே.சந்திர லிங்கம் , கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன் , கல்முனை வடக்கு ஆதரா வைத்திய சாலை  இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ்  ஆகியோரும் விசேட அதிதிகளாகவும் மற்றும்  கல்முனை ,மட்டக்களப்பு ,அக்கரைப்பற்று  கராட்டிப் போதனாசிரியர்களான கே.குககுமாரராஜா ,எம்.பீ.செய்நனுலாப்தீன் , கே.ரவிச்சந்திரன், ரீ.வேல்ட் ,எம் .முரளீதரன்  ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

பல முன்னணி  கருப்புப்  பட்டி  வீரர்கள் கலந்து கொண்ட  இந்நிகழ்வில் கறுப்புப் படி வீரர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப் பட்டன.

கருத்துரையிடுக

 
Top