அபு அலா -

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 20 இலட்சம் ரூபா நிதியில் நாவிதன்வெளி, அன்னமலை கிராமத்திலுள்ள ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று  வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் சித்தி ஜாயிஸா தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன்கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின்போது இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான அவசர சிகிச்சைப் பிரிவுக்கான வைத்திய உபகரணங்கள்  சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன. பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்கு  வைத்தியர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களால் கௌரவமும் வழங்கப் பட்டன. 


கருத்துரையிடுக

 
Top