ஊடகப்பிரிவு ,வன்னியார் சதுக்கம்.
வன்னியார் சதுக்கம் அமைப்பினால் மாணவர்களின் கல்வி; நடவடிக்கைகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்ஸஹிதா வித்தியாலயம் மற்றும் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலைகளைச் சேர்ந்த 200 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைக் கொண்ட தொகுதி வழங்கி வைக்கும் நிகழ்வு 30.11.2015 திங்கட்கிழமை வன்னியார் சதுக்கம் அமைப்பின்   தலைவர் எஸ்.எம். றகீப்  தலைமையில் நிந்தவூர் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம் சலீம், விஷேட அதிதிகளாக ஹபீப் வங்கி முகாமையாளர் ஏ.எல். அன்வர்டீன், டீமா பிஸ்கட் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.சீ.எம் சுபைர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.டீ.ஏ. பத்மசிறி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்தோடு அஸ்ஸஹீதா வித்தியாளய அதிபர் ஏ.எம் அன்வர், ஜேர்மன் நட்புறவு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எஸ்.எம் அன்வர் மௌலவி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கு பூரணத்துவமான  கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, பெற்றாரை இழந்த மாணவ மாணவிகளுக்குப் புத்தகப் பைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அதிதிகள் தங்களது உரைகளில் 'காலத்தின் அவசரத் தேவையின் நிமித்தம் யாருக்கு இந்த உதவிகள் போய்ச் சேர வேண்டுமோ, அத்தகைய மாணவ மாணவிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளமை நிந்தவூர் வரலாற்றில் முதல் முறை' என பிரஸ்தாபித்தனர். 

கவிதைப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி தேசிய மட்டத்திற்கு கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு சென்றுவந்த ஜேர்மன் நட்புறவுப் பாடசாலையின் மாணவனை நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்??.எத்தனை மாலைகள் அவனின் கழுத்துக்களை அலங்கரித்தன??.. சிந்திப்போம் சகோதரர்களே..
இது ஒரு தூண்டலுக்கான பதிவே அன்றி பிரபல்யத்துக்கான பதிவு அல்ல, முடிந்தால் எம்மோடு இணையுங்கள். வறுமைப்பட்ட தேசத்தில் இருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு கல்விமானும் கலங்கரை விளக்கமாக வாழ்ந்ததுதான் வரலாறு. அந்த வரலாற்றை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்ட ஒன்றாய் பயணிப்போம்- அல்லாஹ்வுக்காக மட்டும் கைகோர்ப்போம்.

கருத்துரையிடுக

 
Top