கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்முனை  மாவட்ட நீதிபதி எம். பி. முகைதீன் மற்றும் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் ஆகிய இருவருக்குமான  பிரியாவிடை  வைபவம்  இன்று மாலை  சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடை பெற்றது. 

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எப்.எம்.அன்ஸார் மௌலானா தலைமையில் நடை பெற்ற  பிரியாவிடை நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

கல்முனை மாவட்ட நீதிபதி எம்.முகைதீன் மட்டக்களப்பு  மாவட்ட நீதிபதியாகவும் . கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்று செள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் . 
கருத்துரையிடுக

 
Top