கிழக்கு மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடை பெற்ற  இவ்வருடத்துக்கான கையெழுத்து சஞ்சிகைப் போட்டியில் கல்முனை கல்வி வலயத்துக்கு  நான்கு  இடங்கள் கிடைத்துள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் .
இதன் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்தில்  பாலர் கீழ் பிரிவுக்கான முளரி என்ற சஞ்சிகைக்கு மாகாண  மட்டத்தில்  நிந்தவூர் அரபா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் .இடைநிலைப் பிரிவு 01ல் இதழ்கள் என்ற சஞ்சிகைக்கு  மாகாண  மட்டத்தில்  நிந்தவூர் அல் -மஸ்ஹர்  பெண்கள் உயர்தர பாடசாலை இரண்டாம் இடத்தையும் , இடைநிலைப் பிரிவு 02இல்  பொக்கிஷம்  என்ற சஞ்சிகைக்கு  நிந்தவூர் அல் -மதீனா மகா வித்தியாலயம்  முதலாம் இடத்தையும் ,கல்லூரி நிலைப் பிரிவில் அருவி என்ற சஞ்சிகைக்கு  நிந்தவூர் அல் -மஸ்ஹர்  பெண்கள் உயர்தர பாடசாலை  முதலாம் இடத்தையும்  மாகாண  மட்டத்தில் பெற்றுள்ளன .

இதே வேளை  சம்மாந்துறை வலயம் இரண்டு இடங்களையும் ,மூதூர் வலயம் இரண்டு இடங்களையும்,கல்குடா வலயம் கல்குடா வலயம் ஐந்து இடங்களையும் மட்டக்களப்பு மத்தி,திருக்கோவில்,அக்கரைப்பற்று வலயங்கள் தலா ஒவ்வொரு இடத்தினையும் பெற்றுள்ளன 

கருத்துரையிடுக

 
Top