( அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்தில் திவிநெகும  உதவிபெறும் குடும்பத்திலிருந்து சீட்டிழுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட வருக்கு வாழ்வாதார உதவியாக முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு   கல்முனை திவிநெகும வலய,வங்கி அலுவலகத்தில்  இடம்பெற்றது.

கல்முனை பிரதேசத்தில்லிருந்து 11குடும்பங்கள் இந்த சீட்டிழுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இக் குடும்பங்களுக்கு தலா ரூபா 150,000 விகிதம், ரூபா பதினாறு லெட்சத்தி ஐம்பதாயிரம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இதில்  8 குடும்பங்கள் வீடமைப்புக்கும், ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதார உதவிக்கு முச்சக்கரவண்டியும் , ஒரு குடும்பத்துக்கு  சிறு வியாபார நடவடிக்கைக்கும், மற்றுமொரு குடும்பத்துக்கு  கடல்தொழிலுக்கான  வாழ்வாதார உதவிக்கும் தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

கல்முனை திவிநெகும வலய,வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமட்  ஹனி, திவிநெகும தலைமைக் காரியாலய முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ் மற்றும் திவிநெகும வங்கி உதவி முகாமையாளர் எம்.ஐ.முஜீப்  ஆகியோர்  கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top