(பீ.எம்.எம்.ஏ.காதர் ,யு.எம்.இஸ்ஹாக் )
முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் ஜனாஸா இன்று காலை 7.00 மணிக்கு மருதமுனை மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மர்ஹூம் மசூர் மௌலானா நேற்று கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது வேண்டுதலுக்கமைய அவரது ஜனாஸா நேற்று இரவு  மருதமுனைக்கு எடுத்து வரப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
மருதமுனையில் அவரது பேத்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவு க்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம் பெற்றதன் பின்னர் மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் இடம் பெற்றது. அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்சேய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா விஷேட உரையாற்றினார்.
அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் என அம்பாறை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் இருந்து ஜனாஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இன பாகுபாடின்றி கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top