கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் நற்பிட்டிமுனை சந்தைக் கட்டடம் உள்ளது. அரசாங்க மதிப்பீட்டைச் செய்து சந்தைக் கட்டடத்திலுள்ள கடைகளுக்கு இரண்டு தடவைகள் கேள்விமனுக் கோரியுள்ளோம். இங்குள்ள கடைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு எவரும் விண்ணப்பம் செய்யவில்லை. இதனாலேயே, திறந்து வைக்கப்பட்ட இந்தச் சந்தைக்கட்டடம் தற்போது  மூடிய நிலையிலுள்ளது' என்று  கல்முனை மாநகர சபை ஆணையாளர்  ஜே.லியாகத் அலி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .

ஆணையாளர் கூறுவது  உண்மை என்றால்  எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை மாநகர சபை கண்டறிந்ததா? அது இடம் பெறவில்லை  அரச நியதிப் படி மூன்றாவது தடவையும் கேள்வி கோரப்பட்டு அதற்கும் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை கேள்வி தொகையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் . எதுவுமே இந்த ஐந்து வருடத்துள் இடம் பெறவில்லை .

இந்த புதிய சந்தைக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கு முன்னர்  இருந்த பழைய சந்தைக் கட்டிடத்தில் ஐந்து வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர் . அந்த பழைய கட்டிடத்தை உடைக்கும் போது  கட்டப் படும் புதிய சந்தைக் கட்டிடத்தில் அவர்களுக்கு இடம் வழங்கப் படும் என்ற ஒப்பந்தம் செய்யப் பட்டது. அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப் படாததன் காரணமாகவே  இந்த கடைகளை அவர்கள் பெற முன் வரவில்லை என்பது உண்மை . இதனால் கல்முனை மாநகர சபைக்கான வருமானம் இல்லாது செய்யப்பட்டுள்ளமை மாநகர சபை நிருவாகம்  செய்துள்ள குற்றமாகும்.

உள்ளூராட்சி    கட்டளை சட்டத்தின் படி  கேள்வி தொகையை தீர்மானிக்கும் அதிகாரம் மாநகர சபைக்கு உள்ளது . இரண்டாவது தடவையும் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால்  சபையில் இதற்கான பிரேரணை நற்பிட்டிமுனை மாநகர சபை  உறுப்பினர்களால் கொண்டு வந்திருக்க முடியும் இதனை விட்டு விட்டு இதற்கான போலி நியாயம் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது

கருத்துரையிடுக

 
Top