(யு.எம்.இஸ்ஹாக் )

கல்முனை செலான் வங்கி கிளையின் ஏற்பாட்டில் கல்முனை கல்வி வலயத்தில் சித்தியடைந்த  ஐந்தாம் தரப் புலமைப் பரிசு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் இடம் பெற்றது .
கல்முனை செலான் வங்கி முகாமையாளர். திருமதி பிறேமினி  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பரீட்சையில் சித்திபெற்ற கல்முனை வலயத்தை சேர்ந்த 214 மாணவர்கள் கௌரவிக்கப் பட்டதுடன்  மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் மூவரும் பணப் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டனர் .
நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கி  கிளை முகாமையாளர்  உட்பட  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் தந்தை   பிறைன்  செலர் , பிரதி அதிபர்  அருட் சகோதரி சுதர்சினி ,கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன் உட்பட கல்முனை  வங்கி கிளை அதிகாரிகள்  மற்றும் பல பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள்  மாணவர்கள்,பெற்றோர்கள் என  பலர் மண்டபம் நிறைந்து காணப் பட்டனர் . பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றன .
கருத்துரையிடுக

 
Top