கல்முனை ஹற்றன் நெசனல்  வங்கி கிளையினால் நடாத்தப் பட்ட  சிறுவர் சித்திரப் போட்டியில்  முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறுவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு இன்று வங்க கிளையில் நடை பெற்றது . வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு 

வங்கி உத்தியோகத்தர் அஸீஸ் எம்.பாயிஸ் ஒருங்கிணைப்பில் வங்கி முகாமையாளர் ஏ.எல்.சிறாஜ் அஹமட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  உதவி முகாமையாளர் ரீ.ஆர்.பீற்றர் ,வங்கி உத்தியோகத்தர்களான  எஸ்.ஐங்கரன் ,பீ.கே.எச்.ஹலீம்டீன் ,யு.கடம்பன்  உட்பட  வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசு வழங்கி வைத்தனர் .

நிகழ்வில்  வெளிநாட்டு பணப் பரிமாற்ற  சீட்டிழுப்பில்  அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப் பட்ட எஸ்.தேவசாந்தி என்ற வங்கி வாடிக்கையாளருக்கு 25ஆயிரம் ரூபா  ரொக்கப் பணப் பரிசும் வழங்கி வைக்கப் பட்டது.

ஆறு வயதுக்குட்பட்டவர்களுக்கான சித்திரப் போட்டியில்  முதலாம் இடம் பீ.கெளரிசா , இரண்டாம் இடம் பீ.சதீஸ் ,மூன்றாம் இடம் எம்.எம்.அன்ஸார் . ஆறு தொடக்கம் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட  போட்டியில் முதலாம் இடம் எம்.எச்.கார்நெலெஷ்லி , இரண்டாம் இடம் எம்.ஆர்.எப்.அம்னா , மூன்றாம் இடம் எம்.ஆர்.பாத்திமா அலீனா . 12 தொடக்கம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான  சித்திரப் போட்டியில் முதலாம் இடம் என்.எம்.நுஸ்ரி ,இரண்டாம் இடம் எம்.ஐ.இர்ஷாத் பானு ,மூன்றாம் இடம் எஸ்.ஏ.ஸைனப்  ஆகியோருக்கே பரிசுகள் வழங்கப் பட்டன 


கருத்துரையிடுக

 
Top