( அப்துல் அஸீஸ்)தமது குடியிருப்பு வீடுகளை பூர்த்திசெய்ய முடியாத வறிய குடும்பங்களுக்கு சிமெந்து பக்கட்டுகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (3) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதற்கமைவாக கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  65 குடும்பங்களுக்கு தலா  10சிமெந்து பக்கட்டுகள் விகிதம் வழங்கி இன்று இந்நிகழ்வு  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்யினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமட்  ஹனி  தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டதுடன், தேசிய  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்  கரன்  சூரியா  உட்பட  பிரதேச செயலக  அதிகாரிகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அமைச்சரின் அலவலக  அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top