(எம்.எம்.ஜபீர்)
நற்பிட்டிமுனை பிறின்ஸ்  கல்லூரி   பாலர் பாடசாலை மாணவர்களின்  வருடாந்த கலை கலாச்சார விழா பிறின்ஸ்  கல்லுரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் முஹம்மட் றியாஸ் தலைமையில் அல்-அக்ஸா  மகா வித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நேற்று  நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் யூ.எல்.தௌபீக், மருதமுனை அமான வங்கியின் உதவி முகாமையாளர் எம்.எம்.றியாஸ் கான். நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் வை.எல்.ஏ.வசீர், நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜஃபர், அல்-அக்ஸா மகா வித்தியாலத்தின் ஆராம்ப பிரிவு பொறுப்பாசிரியர் வை..ஏ.கே.தாசீம், கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.ரீ.ஹாறூன், உயர் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
.
பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கலந்துகொண்ட அதிதிகளினால் சான்றிதழ், பரிசில்கள் மற்றும் புத்தகப்பை என்பன  வழங்கிவைத்தனர்.  

கருத்துரையிடுக

 
Top