கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 48 குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு இன்று (03) வியாழக்கிழமை கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் மாவட்டத்தில் 1000 குடும்பங்களுக்கு பூச்சு வேலைகளுக்கு சீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்  கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எம்.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிழ்வில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாள் கலன்சூரிய, கல்முனை காரியாலய முகாமையாளர் ஏ.எம்.இப்றாகிம் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top