ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்  தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம்  தலைமையில்  கொழும்பு சுவடிக் கூட கேட்போர் கூடத்தில் மர்ஹூம் செனட்டர் மஷூர் மௌலானா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 18.12.2015 நடைபெற்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா , தேசிய காங்கிரஸ் முக்கிய பிரமுகர் DR . உதுமா லெவ்வை மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூfப் ஹகீம் ஆகியோர்  அன்னாருடைய கடந்த கால பணிகள் பற்றி உரையாற்றினார்கள் இவ் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் தமிழ் கட்சிகளின் பிரமுகர்கள் , முன்னைநாள் அமைச்சர் மன்சூர், அஸ்வர் , மசூர் மௌலானாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகள் என பலர் பங்குபற்றியிருந்தார்கள்

கருத்துரையிடுக

 
Top