காத்தான்குடியில் கடந்த 5-04-2015 மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டிருந்த பூர்வீக நூதனசாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (14) முதல் மீண்டும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பூர்வீக நூதனசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலையில் சில உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை அகற்றுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஆலோசனை விடுத்திருந்தது. இதனடிப்படையில் கடந்த ஜுன் மாதம் தொடக்கம் இந்த நூதனசாலை மூடப்பட்டது.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகள் தற்போது அகற்றப்பட்டு மீண்டும் இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திங்கட்கிழமை (14) திறக்கப்பட்டுள்ளது.
இந்த நூதனசாலை காலை 10 மணி முதல் மாலை ஆறுமணி வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அதன் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top