அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டத்தில் கூறப்பட்ட விடயங்களால் வங்கிகளின் வலையமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், இன்று செவ்வாய்க்கிழமை (15) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
 நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டிலேயே வங்கி வலையமைப்பு பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. மேலும், உள்நாட்டு தனியார் வங்கிகளுக்கு வரவு - செலவுத்திட்டத்தால் மரண அடி வீழ்ந்துள்ளதாகவும், ஊழியர் சேம இலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய கொள்ளையடிப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டதாகவும் வங்கிகளின் தொழிற்சங்கம் கூறியுள்ளது.  மேலும், அரசாங்கம் ஓய்வூதியத்தில் சுத்திரிப்பு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கருத்துரையிடுக

 
Top