அரச சுற்று நிருபத்துக்கமைய  சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள் இன்று  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நடை பெற்றது .

வலயக் கல்வி பணிப்பாளர்  தேசியக் கொடியேற்றி  நிகழ்வை ஆரம்பித்து வைத்து   உறுதி மொழி பிரகடனத்தை வாசித்தார் .ஏனைய  அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள்  அந்த உறுதிமொழியை ஏற்று சத்தியப் பிரமாணம்  செய்து  கொண்டனர்.

பரிசுத்தமான  தேசம் ஒன்றை நாளைய சந்ததியினருக்கு உரித்தாக்கும் உயரிய நோக்குடன்  முன்னோடியாக அற்பணிப்புடன் தனிப்பட்ட ரீதியிலும்  தொழில் சார்ந்த வாழ்விலும்  சிறந்த வெளிப்படை தன்மையுடன்  பொறுப்புக் கூறும் வகையிலும்  அர்பணிப்புக் கண்ணோட்டத்துடனும்  இலஞ்சமும்  ஊழலும் அற்ற  கௌரவமான  பிரஜையாக அபிமானத்துடன்  வாழ்வேன் என்றும் சேவையாற்றுவேன் என்றும்  நான் திடசங்கற்பத்துடனும்  கௌரவத்துடனும் உறுதியளிக்கிறேன்  என்று அனைவராலும்  சத்தியப் பிரமாணம் செய்யப் பட்டது .

நிகழ்வில்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.அப்துல் ரஹீம்,பீ.எம்.வை.அரபாத் ,கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ,நிருவாக உத்தியோகத்தர்  ஜீ .பரம்சோதி  உட்பட அனைத்து  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .
பிரதிக் கல்விப்  பணிப்பாளர்  எஸ்.எல் .அப்துல் ரஹீம் மற்றும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோரால் ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வு பற்றி உரையாடப் பட்டது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அங்கு உரையாற்றுகையில் ஒவ்வொருத்தரும் அவரவர் மன சாட்சிப் படி தங்களுக்கு ஒப்படைக்கப் பட்டுள்ள அமானிதங்களை  தங்களது மன அச்சுறுத்தலுக்கு பயந்து  செயல் பட்டால்  எம்மால் வாசிக்கப் பட்ட இந்த உறுதி மொழி உண்மைப் படுத்தப் படும் என்றார் .







கருத்துரையிடுக

 
Top