(அப்துல் அஸீஸ்)

 திவி நெகும உதவி பெறும் பெண்கள்  தலைமை தாங்கும்  வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கும்  நிகழ்வு  இன்று (3)வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது,

 கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  68குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள இவ் வேலைதிட்டத்தில் இன்று முதற்கட்டமாக  06குடும்பம்களுக்கு தையல் இயந்திரங்கள்  வழங்கி ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

திவி நெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ்யின் ஒருங்கிணைப்பில் , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமட்  கனி  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலக  திவி நெகும அதிகாரிகள், அமைச்சரின்   அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top