(ஹாசிப் யாஸீன்)


பொத்துவில் பிரதேச கெடோயா நீர்ப்பாசனத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்முறையான நீர்ப்பாசனத்திட்டம் இன்மையால் அங்குள்ள விவசாயிகளின் பல்லாயிரக்கணக்கானகாணிகள் செய்கை பண்ணப்படாமல் காணப்படுகின்றதுஇதனைஅரசாங்கம் கவனத்தில் எடுத்து  இத்திட்டத்தினைநிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்


நீர்ப்பாசனம்சுற்றாடல்மகாவலி அபிவிருத்திஅமைச்சுகளுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம்இன்று (07) திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இவ்விவாதத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொத்துவில் கெடோயா நீர்ப்பாசனத் திட்டத்தினை கடந்த காலஅரசும் அமைச்சர்களும் நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதிகள்வழங்கியிருந்தும் அது நிறைவேற்றப்படவில்லைஇதனால்இங்குள்ள விவசாயிகள் பல கஷ்டங்களை அனுபவித்துவருவதுடன் தனது வாழ்வாதார தொழிலையும்  இழந்துள்ளனர்.

இன்று நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதுஇத்திட்டத்திற்குநீரைக்கொண்டு வரக்கூடிய மொனராகலை மாவட்டத்தைசேர்ந்தவர் நீர்ப்பாசன அமைச்சராக விஜயமுனி சொய்ஸாஇருப்பதால் இம்மாவட்டத்திலிருந்து நீரைக்கொண்டு வந்துஇத்திட்டத்தினை நிறைவேற்றுவது இலகுவானதாக இருக்கும்என நினைக்கின்றேன்.

இத்திட்டத்தினை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு லட்சத்திற்குமேற்பட்ட மக்கள் நன்மையடைவுள்ளனர்இதனால் பொத்துவில்மக்களின் வாழ்வாதாரமும்நாட்டின் பொருளாதாரமும்உயர்வடையும்.

அமைச்சர் விஜயமுனி சொய்ஸா ஊவாமுதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அப்பகுதி சிறுபான்மைமக்களுக்கு பல வகைகளில் சேவையாற்றியர்எனவே எனதுமாவட்ட பொத்துவில் மக்களின் இப்பிரச்சினையை அமைச்சர்கவனத்தில் எடுத்து நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம்விவசாயிகள் மட்டுமல்லபொத்துவில் பிரதேசத்திலுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்குதீர்வு காணக்கூடியதாக அமையும்இதனால் அப்பிரதேசத்திலுள்ளலட்சக்கணக்கான மக்கள் நன்மையடைவார்கள்.

அதே நேரம் சுற்றாடல் அமைச்சின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில்கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கரங்கோபாலையடி வட்டை,ஏகாம்பற்றுபள்ளியடி வட்டைவட்டமடு போன்ற பிரதேசத்தில்கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில்விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

இன்று வன பரிபாலனை திணைக்களமும் வன விலங்குகள்திணைக்களமும் இக்காணிகளுக்குள் விவசாயம் செய்வதைதடை செய்துள்ளதனால் அம்மக்கள் தங்களது ஜீவனோபாயதொழிலான விவசாயத்தை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

சுற்றாடல் அமைச்சுக்கு பொறுப்பான ஜனாதிபதியும் அதற்கானபிரதி அமைச்சர்களும் பொத்துவில் மக்களின் இந்நிலைமையைகருத்தில் கொண்டு இக்காணிகளுக்குள் விவசாயம் செய்யக்கூடியஉரிமத்தை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கல்முனை கரைவாகு நீர்ப்பாசனத்திட்டம் கடந்தகாலத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் செய்யப்பட்டுவந்ததுதற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதுஇத்திட்டத்தினைமீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதிகளை அமைச்சர் ஒதுக்கீடுசெய்துதர வேண்டும்இதனால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டகரைவாகுவட்டை காணிகள் இரண்டு போகம் விவசாயம்செய்யக்கூடியவாறு அமையும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஸா,பிரதி அமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டிய பொத்துவில் கெடோயாநீர்ப்பாசனத் திட்டத்தினையும்கல்முனை  கரைவாகு நீர்ப்பாசனத்திட்டத்தினையும் நிறைவேற்றித்தர உடன் நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கருத்துரையிடுக

 
Top