நற்பிட்டிமுனை கிராமத்தில்  நெக்டப்  திட்டத்தின்  கீழ் 02 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப் பட்ட  பொதுச்சந்தைக் கட்டிடம்  கடந்த 2010.04.04  அன்று   திறந்து வைக்கப் பட்டது .
அன்று கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்த  யு.எல்.எம். தௌபீக்கின்
அழைப்பின் பேரில்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும்  அன்றைய  மாநகர சபை முதல்வராக இருந்த தற்போது பிரதி அமைச்சராக இருக்கின்ற எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அன்று திறக்கப் பட்ட  சந்தைக் கட்டிடம்  இன்று வரை மூடப் பட்டு  பாழடைந்து கிடக்கிறது . கல்முனை மாநகர சபை  சாதித்துள்ள பெரும் சாதனைகளில் இதுவும் ஒன்றாகும் .

கட்டி முடிக்கப் பட்ட கட்டிடத்தையே  திறக்க முடியாத  கல்முனை மாநகர சபை  அக்கட்டிடத்தை திறந்து வைத்த  ரவூப் ஹக்கீமை ஏமாற்றினார்களா? அல்லது ஹரீசை ஏமாற்றினார்களா என  மக்கள் கேட்கின்றனர்.

எதிரே  வருகின்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியில் நட்பிட்டிமுனையில் வேட்பாளராக இறங்கவுள்ள தன்மானம் உள்ளவர் யாராக இருந்தாலும் இதற்க்கு தீர்வை கண்டு விட்டு இறங்க வேண்டும் .


கருத்துரையிடுக

 
Top