கல்முனை மாநகரத்தில் நாற்றமடிக்கு பிரதேசமாக கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தை கல்முனை மாநகர சபை  பிரகடனப் படுத்தியுள்ளதாக  இஸ்லாமாபாத் மக்கள் மாநகர சபையை கடிந்து கொள்கின்றனர் .

கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசம் சுனாமியால் பாதிக்கப் பட்டு தொடர் மாடி வீட்டு திட்டத்தில் வதியும் ஒரு பிரதேசமாகும் . அங்குள்ள மக்களின் கழிவுகளை கொட்டுவதற்கு  கல்முனை மாநகர சபையினால்  ஒழுங்கு முறையான திட்டம் அமுல் படுத்தப் படாமையால்  மக்கள் தெருவோரங்களில்  கழிவுகளைக் கொட்டி வருகின்றனர் . இந்தக் கழிவுகளால் அந்த பிரதேசமே  துர்வாடை வீசுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் ஆபத்கும் ஏற்பட்டுள்ளது . இதன் அருகே  பிரதேச சுகாதார காரியாலயம் ,கல்விக் காரியாலயம் அமைந்திருந்தும்  இந்த விடயத்தை யாரும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை .

கல்முனை மாநகர சபை இந்தப் பிரதேசத்தை நாற்றம் அடிக்கும் பிரதேசமாக பிரகடனப் படுத்தி  இப்பகுதியல் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை நோயாளிகளாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்த நிலையில் தெரிவிக்கின்றனர் .

இரண்டு வாரங்களாக  இங்கு போடப் பட்டுள்ள கழிவுகள் அகற்றப் படாமையால்  மழை  நீர் தேங்கி அந்தப் பிரதேசம் மிக மோசமான சுகாதார சீர்கேட்டை அடைந்துள்ளது . மாநகர சபை ஆணையாளரே , சுகாதார திணைக்களமே, கல்வித்திணைக்களமே  இதற்க்கான தீர்வை பெற்றுக் கொடுத்து மக்களின் உயிர்களை பாதுகாப்பீர்களா? 

கருத்துரையிடுக

 
Top